2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கத்தின் நினைவுப்பேருரை

Kanagaraj   / 2014 மார்ச் 31 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்

மறைந்த நாவலாசிரியை தமிழ்மணி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கத்தின் நினைவுப்பேருரை நிகழ்வு திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது.

இலக்கியவாதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்த நிகழ்வு, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  நகரசபைத்தலைவர் க.செல்வராசா முதன்மை விருந்தினராகவும், ஓய்வு பெற்றகல்வி பணிப்பாளர் திருமதி.தேவிகா ராணி முருகுப்பிள்ளை,  ஓய்வுபெற்ற ஆசிரியை செல்வி மணிமேகலாதேவி கார்திகேசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாவும் கலந்துகொண்டனர்.
நினைவுப் பேருரையினை ஓய்வு பெற்ற அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சி.நவரெத்தினம் (திருமலை நவம் ) நிகழ்த்தினார்.











You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X