2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'எல்லாளன் காவியம்' நூல் வெளியீடு

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.குகன்


புலவர்மணி காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீனின் 'எல்லாளன் காவியம்' எனும் நூல் யாழ்ப்பாணம்  றக்கா வீதியில் அமைந்துள்ள கலாமுற்றம் ஓவியக்கூடத்தில் ஞாயிறறுக்கிழமை (23) வெளியிடப்பட்டது.

கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  நூலின் முதற்பிரதியை புரவலர்.எஸ்.பி சாமி நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி வி.பி.சிவநாதன், சட்டபீடத் தலைவர்  கலாநிதி த.கலாமணி, அருட்திரு செ.அன்புராசா, சட்டத்தரணி சோ.தேவராசா, விரிவுரையாளர் இ.ராஜேஸ்கண்ணன் ஆகியோரும் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நூலின் ஆய்வுரையை கலாநிதி நா.அகளங்கனும், நயப்புரை கலாநிதி செ.திருநாவுக்கரசும் நிகழ்த்தினார்கள்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X