2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'வணிக வனிதை' நூல் வெளியீடு

Super User   / 2014 மார்ச் 21 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் வணிக மன்றத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் 'வணிக வனிதை'யின் 16 ஆவது நூல் வியாழக்கிழமை (20) கல்லூரியின் விசாலாட்சி மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி தேவரஞ்சினி சிவாஸ்கரன் நூலை வெளியிட்டு வைத்தார்.

இந்நூலில் கல்லூரியின் வணிக மாணவர்களின் வணிகத்துறை சார்ந்த ஆக்கங்கள் உள்ளடங்கியதாக வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X