2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இலக்கிய அணியின் வள்ளுவர் விழா

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-வி.விஜயவாசகன்


யாழ்.தென்மராட்சி இலக்கிய அணியினால் நடத்தப்படும் 'வள்ளுவர் விழா' சாவகச்சேரி இந்துக் கல்லூரியில்  ஞாயிற்றுக்கிழமை (02) காலை, மாலை என்ற ரீதியில் இரு அமர்வுகளாக நடைபெற்று வருகின்றன.

சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் அ.கைலாலயபிள்ளை தலைமையில் நடைபெற்ற காலை நிகழ்வுகளில் 'வள்ளுவரின் வழி நடப்போம்' என்ற நூல் வெளியிடப்பட்டது.

இந்நூலினை சாவகச்சேரி மக்கள் வங்கிக் கிளையின் முன்னாள் முகாமையாளர் க.சண்முகலிங்கம் வெளியீட்டு வைக்க தென்மராட்சி இலக்கிய அணியின் பேச்சாளர் டாக்டர்.சு.கே.அருளானந்தம் நூலினைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, 'வள்ளுவர் வகுத்த இல்லறவியலில் தமிழர் தம் தனித்துவப் பண்பாய் மேல்நிற்பது' என்ற தலைப்பில் சூழலும் சொற்போர் நடைபெற்றது. நடுவராக கலாநிதி ஸ்ரீபிரசாந்தன் தலைமைதாங்கியதுடன், கு.பாலசண்முகன், பா.விக்னேஸ்வரன், க.ரஜனிகாந், செ.செல்வரமணன், ந.விஜயசுந்தரம், கம்பவாரி இ.ஜெயராஜ் ஆகியோர் வாதாடினர்.

யாஃ சாவகச்சேரி மகளிர் கல்லூரி அதிபர் லலிதா முகுந்தன் தலைமையில் நடைபெறவுள்ள மாலை நிகழ்வில் ஆன்றோரை கௌரவிக்கும் நிகழ்வாக மருத்துவர் ச.அம்பிகைபாகன் கௌரவிக்கப்படவுள்ளார்.

அத்துடன் 'வள்ளுவர் வகுத்த வாழ்க்கைத்துணை நலத்தின் வழிநின்று பெரும் புகழ் கொண்டவள் கண்ணகியே! சீதையே! பாஞ்சாலியே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

இந்த பட்டிமன்றத்திற்கு நடுவராக கம்பவாரிதி இ.ஜெயராஜ் இருப்பதுடன், ஸ்ரீபிரசாத், மணிமாறன், இ.வேல்நம்பி, த.நாகேஸ்வரன், அ.வாசுதேவ ஆகியோர் வாதாடுகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .