2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கலைஞர்கள் சமூகத்தினதும் பிரதேசத்தினதும் கண்ணாடி: உப வேந்தர்

Super User   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.வை.அமீர்,எஸ்.எம்.எம்.ரம்ஸான்


கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவர்கள் சார்ந்த சமூகத்தினதும் பிரதேசத்தினதும் கண்ணாடியை போன்றவர்கள் என தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

கதீர் எழுதிய 'மணல் நதி' எனும் கவிதை தொகுதி வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை கல்முனை சபா வரவேற்பு மண்படத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர்

"தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பல்வேறுபட்ட சாதனைகளை படைத்துள்ளனர். இதன் ஊடாக அவர்கள் வாழ்கின்ற பிரதேசத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துக் கொடுக்கின்றார்கள். அந்த வகையில் இன்று 'மணல் நதி' எனும் தலைப்பில் கல்முனை கதிர் சிறந்ததொரு கவிதைத் தொகுதியை எழுதியுள்ளார்.

அதுவும் குறிப்பாக இப்பிரதேசத்தின் பிரபல்யம் வாய்ந்த பாவலர் பசீல் காரியப்பர் அரங்கில் 'மணல் நதி' எனும் கவிதைத்தொகுதி வெளியிடப்படும் செயலானது மிகுந்த பெருமையளிப்பதாக உள்ளது.கிழக்கு மாகாணத்தை பொருத்தமட்டில் கலைஇ கவிஇ நடனம் மற்றும் எழுத்து என்பன மிகவும் பிரபல்யம் பெற்றது.

இது எங்களது மண்ணுக்குரிய வாசனையாகவே எங்களால் பார்க்கப்படுகின்றது. ஒரு காலத்தில் தென்னிந்திய எழுத்துக்களையும் ராகங்களையும் சுவைத்துக்கொண்டிருந்த நாங்கள் இன்று இப்பிரதேசத்தில் தமிழை வளர்க்கக்கூடிய தமிழுக்கு உயிர் சேர்க்கக்கூடிய நிபுணர்கள் எமது பிரதேசத்திலும் உருவாக்கி வருகிறார்கள் என்பது பெருமயளிக்கின்றது.

நாளாந்தம் நாங்கள் காண்கின்ற செய்கின்ற விடையங்களை மிகவும் எளிய தமிழ் நடையில் கவிதை வடிவில் கதிரைப்போன்ர சகோதரர்கள் எங்களுக்கு தருவது எங்களுடைய நேரத்தை சிறந்த முறையில் செலவு செய்யவும் பிரயோசனப்படுத்த உந்து சக்தியாக இருந்து கொண்டிருக்கின்றது.

இன்று உலகில் சில நாடுகளை கலைஞர்கள் ஊடாக காண முடிகிறது. உதாரணமாக பலஸ்தீன், ஈரான், இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளிலும் இவ்வாறான கலைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்" என்றார்.

கல்முனை 'அநுசரி இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலைஞர்களான எஸ்.எல்.எம். ஹனீபா, எஸ்.கருணாகரன், மு.மு.மு. பாசில்இ மு.நபீல், ஏ.பீ.எம். இத்ரீஸ், எஸ்.றமேஸ்இ றியாஸ் குரானா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் முஹம்மத் றனூஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் குழுவின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .