2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

இஸ்லாமிய நிதியியலை இலங்கையில் அறிமுகப்படுத்திய 'காலித் மௌலவி' தொடர்பான புத்தகம் வெளியீடு

Super User   / 2014 ஜனவரி 28 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இஸ்லாமிய நிதியியலை முதன்முதலில் அறிமுகப்படுத்திய மர்ஹும் காலித் மௌலவியின் பணிகள் குறித்த புத்தகமொன்று எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு அக்குறணை அஸ்ஹர் கல்லூரி மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.

தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் நளீமியினால் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தை வெளியிடும் பணியை மத்திய மாகாணத்தினை மையமாகக் கொண்டு வெளியிடப்படும் நிவ்ஸ்வீவ் பத்திரிகையினை வெளியீடும் எமெக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

அக்குறணையை சேர்ந்த காலித் மௌலவி பல்வேறு முன்மாதிரியான பணிகளைச் செய்தவர். இன்று இலங்கையில் இஸ்லாமிய வங்கிகளுக்கு அங்கீகாரமும் வரவேற்பும் கிடைத்துள்ளமைக்கு வித்திட்டவர் இவரேயாவார்.1990ஆம் ஆண்டு இவர் ஆரம்பித்த ஐ.எஸ்.எஸ். இஸ்லாமிய நிதி நிறுவனம் இன்றும் செயற்பட்டு வருகின்றது.

அக்குறணை, மாத்தளை, கிண்ணியா, மாவனெல்லை, திஹாரிய போன்ற பிரதேசங்களில் இந்த நிறுவனும் கிளைகளையும் கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, அக்குறணையிலுள்ள ஜாமிஆ ரஹ்மானிய்யா அரபுக் கலாசாலை, ஐ.எஸ்.எஸ். வைத்தியசாலை, அல் முஃமினாத் பெண்கள் அரபுக் கல்லூரி என இன்னும் பல்வேறு சமூக நிறுவனங்களை ஆரம்பித்தவரும் இவராவார்.

2012ஆம் ஆண்டு காலமான மர்ஹும் காலித் மௌலவி குறித்த புத்தக வெளியீடு, ஜாமிஆ ரஹ்மானிய்யா அரபுக் கலாசாலையின் முன்னாள் அதிபர் செய்கு ரஹ்மானி ஜிப்ரி ஹஸரத் தலைமையில் நடைபெறவுள்ளது. புர்கானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் (ரஹ்மானி) சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்ளவுள்ளதுடன், இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனத்தின் தலைவர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் (நளீமி) நூல் விமர்சனம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X