2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

வித்தியா சஞ்சிகை வெளியீடு

Kogilavani   / 2014 ஜனவரி 22 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல் 


'வித்தியா' எனும் தமிழ் சஞ்சிகை வெளியீடும், சிறுவர் திறன் வெளிப்பாடு நிகழ்வும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக்கத்தின் ஏற்பாட்டில் மட்.வின்சென்ற் தேசிய பாடசாலையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்வி திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ.கோவிந்தராஜா தலைமையில் நடைபெற்ற இச்சஞ்சிகை வெளியீடும் நிகழ்வில்  கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சி.சிவநிர்த்தானந்தா, முன்னாள் வலயக்கல்வி கல்வி பணிப்பாளர் ச.மாணிக்கராஜா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம கணக்காளா திருமதி வ.கணேஷமூர்த்தி, மற்றும் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் கல்விமான்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் தலைமையுரையினை பொ.கோவிந்தராஜாவும், சஞ்சிகையின் வெளியீட்டு உரையினை திருமதி சி.கணேசலிங்கமும்;, சஞ்சிகையின் விமர்சன உரையினை முன்னாள் அதிபர் மு.இராசரெத்தினமும்; நிகழ்ததினர்.

சஞ்சிகையின் முதற் பிரதியினை கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சி.சிவநிர்த்தானந்தாவிடமிருந்து முன்னாள் வலயக்கல்வி கல்வி பணிப்பாளர் ச.மாணிக்கராஜா பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சிறுவர் திறன் வெளிப்பாடு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X