2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

தைப்பொங்கல் கலைவிழா

Super User   / 2014 ஜனவரி 15 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


யாழ். திருமறை கலா மன்றத்தின் ஏற்பாட்டில்  தைப்பொங்கல் கலைவிழா நேற்று (14) மன்றத்தின் கலைத்தூது கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை கொழும்புத்துறை புனித வளனார் குருமடத்தின் அதிபர் அருட்பணி செ. அன்புராசா நிகழ்த்தினார்.

தமிழ்ப்பொங்கல் என்ற தொனிப்பொருளில் சிறப்புரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் வழங்கினார். தொடர்ந்து, உண்மை கெடுதியானது என்ற தொனிப்பொருளில் மன்றத்தின் பிரதி இயக்குநர் யோண்சன் ராஜ்குமார் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

இதில் சட்டத்தரணி ஜொனி மதுரநாயகம், கவிஞர்களான கு.ரஜீபன், மாவை கஜேந்திரா, பி.எஸ்.அல்பிரட், யோ.யஸ்ரின் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு நிகழ்வாக திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் வழங்கிய சத்தியவான் சாவித்திரி என்ற இசைநாடகமும் நடைபெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X