2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

நாடக பிரதியாக்கப் போட்டியில் யாழ். ஆசிரியர்கள் இருவருக்கு சிறப்பு விருது

Kogilavani   / 2014 ஜனவரி 06 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


கொழும்பு, றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட நாடக பிரதியாக்கப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.குமரன், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகிய இருவரும் தேசிய ரீதியில் சிறப்பு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினால் அகில இலங்கை ரீதியில் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல்  ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வரை திறந்த நாடகப் பிரதியாக்கப் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் 10 மூத்த நாடக படைப்பாளிகளுடைய நாடகப்பிரதிகளும் ஆறு இளம் படைப்பாளிகளின் நாடகப்பிரதிகளும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு றோயல் கல்லூரி அதிபர் உபாலி குணசேகர தலைமையில் றோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நாடக பிரயாக்க போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்படி ஆசிரியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஓய்வு நிலை பிரதி பரீட்சை ஆணையாளர் ஜீ.போல் அன்ரனியும் துறைசார் விருந்தினராக நாடகக் கலைஞர் கலைச்செல்வனும்; கலந்துகொண்டனர்.

இதன்போது, விம்பம் என்னும் பதினாறு நாடகப்பிரதிகளின் தொகுப்பு நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X