2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலை விழா

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


தென்மராட்சி கல்வி வலயத்தின் 'மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலை விழா' நிகழ்வு சாவகச்சேரி சிவன் கோயில் வீதியிலுள்ள தென்மராட்சி கலை மன்ற கலாசார மண்டபத்தில் இன்று (16) காலை 9 மணிக்கு நடைபெற்றது.

தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், மாகாண கல்விப் பணிப்பாளர் வை.செல்வராசா, சாவகச்சேரி நகர சபைத்தலைவர் இ.தேவசாகயம்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி முன்பாக தமிழர் பாரம்பாரியங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகள் அடங்கிய ஊர்திகள் பவனி ஊடாக விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் அறிஞர் மறவன்புலோ க.சச்சிதானந்தனை  கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அனுசரணையுடன் 'முழுநிலா நாள் கலை விழா' நிகழ்வுகள் வடமாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களிலும் மாதம் ஒரு வலயத்தில் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X