2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச கலாசார விழா

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

2013ஆம் ஆண்டிற்கான அட்டாளைச்சேனை பிரதேச கலாசார விழா சனிக்கழமை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

"குர்ஆனை ஓதுவோம் அதன் படி நடப்போம்" என இந்த ஆண்டினை கருப்பொருளாகக் கொண்டே இந்த கலாசார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, பிரதேச, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள் பாராட்டிக் கௌரவிக்கபட்பட்டதுடன் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மட்டக்களப்பு நீதவான் என்.எம்.அப்துல்லா, ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் ஐ.எல்.இப்றாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X