2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'நிழல்களின் நிஜங்கள்' புகைப்படக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


யாழ். இந்துக்கல்லூரி புகைப்பட கழகத்தினரின் ஏற்பாட்டில் 'நிழல்களின் நிஜங்கள்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது.

யாழ். இந்துக்கல்லூரி சிட்னி பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் நேற்று புதன்கிழமை ஆரம்பமான  இக்கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் தே.தேவானந்த் கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இப்புகைப்படங்கள் செய்திப் படங்களை விட இயற்கையைப் பிரதிபலிக்கும் வகையில் காணப்படுகின்றன. ஒரு மனிதனுடைய வாழ்க்கை இயற்கையுடனேயே ஆரம்பிக்கின்றது என்பது போல இக்கல்லூரியின் முதல் புகைப்படக் கண்காட்சியும் இயற்கையுடன் ஆரம்பமானதைத் தொடர்ந்து, தொடர்ச்;சியாக பல படைப்புக்களை மாணவர்கள் வெளிக்கொணர வேண்டும்.

புகைப்படத்துறை என்பது நிறைய வேலைவாய்ப்புக்களை வழங்கும் துறை. அந்த வகையில் புகைப்படத்தின் மீதான ஆர்வத்தை சிறுவயதிலிருந்து மாணவர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும்.  யாழ். பல்கலைக்கழக ஊடக பயிற்சி மையத்தின் வளங்களை மாணவர்கள் பயன்படுத்தி புகைப்படங்கள் சார்பான படைப்புக்களை வெளிக்கொள்வதற்கும் உதவிகளை வழங்க நாம் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X