2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

யாழ்.மத்திய கல்லூரி நாடகக்குழு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்.மத்திய கல்லூரி நாடகக்குழுவின் 'எங்களின் வாழ்வு' என்னும் நாடகம் தேசிய மட்ட நாடகப் போட்டிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் மேற்படி நாடகம் முதலிடம் பெற்றதன் மூலம் இந்த வாய்ப்பினை அந்தக் குழு பெற்றுக்கொண்டுள்ளது.

கலாசார, கலை அலுவல்கள் அமைச்சும் கொழும்பு ரவர் திரையரங்கமும் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளன.

'எங்களின் வாழ்வு'  என்ற நாடகத்திற்கான நெறியாளராக யாழ்.மத்திய கல்லூரி நாடகத்துறை  ஆசிரியர் எஸ்.ரி.குமரனும் இசையினை கோகுல் பிரசாத் றொசானும்; மேடை முகாமையினை பிரவீனும் மேற்கொள்கின்றனர்.

இந்நாடகத்தில் நடிகர்களாக  அபிசேக்  சண்முகப்பிரியன், கயேந்திரன்   அபினாஸ், கனோஜன்   ஜனார்த்தன், தர்மிசன் சுகிர்தன், லக்ஸன்   பிரவீன், சதீஸ்குமார் பெல்ஜியோ, தர்சன் சாள்செபஸ்ரியான்,  விதுர்சன் அட்சரன், சுரேஸ்மோகன் பெனற் சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X