2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கனியும் கனா கவிதை நூல் வெளியீடு

Super User   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

கனியும் கனா கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரிய பயிலுனர்கள் ஆகியோரின் ஆக்கத்தில் உருவானதே இந்த நூலாகும்.

கல்வி கல்லூரியின் வரலாற்றில் முதற் தடவையாக உருவான கனியும் கனா கவிதை நூல் வெளியீட்டு விழா மாணவர்களின் கலை நிகழ்வுடன் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விரிவுரையாளரும் நூலாசரியருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். நாஸிர் கனி தலைமையில் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக மொழியியல் துறையின் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, கல்வி கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.எம்.நவாஸ், உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியப் பயிலுனர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .