2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'அப்துல்கலாம் என்ன சொன்னாரு' குறும்படம் வெளியீடு

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


'அப்துல்கலாம் என்ன சொன்னாரு' எனும் குறுந்திரைப்படமொன்று ஞாயிற்றுக்கிழமை  மாலை மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட இந்த குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு வைபவம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஏ.பிறேம்குமார், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பிரதி அதிபர் ஆர்.பெஸலியோ வாஸ், மண்முனை மேற்கு உதவிக் கல்விப்பணிப்பாளர் பி.ரவிச்சந்திரன், அருட்தந்தை எம்.ஸ்ரணிஸ் லொஸ், திருமறைக்கலா மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினர் எஸ்.வள்ளுவன் உட்பட முக்கியஸ்த்தர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பி.கொன்ஸ்ரன் கிர்சன் எனும் மாணவர் இந்த குறுந்திரைப்படத்தின் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

விடா முயற்சி எவ்வாறு வெற்றியை ஏற்படுத்தும் என்பதை சித்தரிக்கும் வகையில் கல்வியை விடாது கற்பதன் மூலம் ஏற்படும் நன்மை குறித்து இந்த குறுந்திரைப்படம் சித்தரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X