2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தமிழர் விழாவை நடத்த ஏற்பாடு

Kogilavani   / 2013 நவம்பர் 14 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்
மட்டக்களப்பு ஆரையம்பதி கலைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜனவரி 25 மற்றும் 26ஆம் திகதிகளில் தமிழர் விழா நடைபெறவுள்ளது என ஏற்பாட்டு இணைப்பாளரான த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

இது தொடர்பான ஒன்றுகூடல்கள் நடைபெற்று வருவதுடன், இரண்டாவது ஒன்று கூடல் எதிர்வரும் 16ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு ஆரையம்பதி இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களுடைய கலை கலாசரங்களை அடையாளப்படுத்தி இளம் தலைமுறையினருக்குக் கையளிக்கும் நோக்கில் நடைபெறவுள்ள இவ்விழாவில், மாலை நேரத்தில் பாரம்பரிய கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதோடு, காலை அமர்வுகளில் ஆரையம்பதிப் பிரதேசத்தினுடைய வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் பல்வேறு தொனிப்பொருள்களில் ஆய்வரங்குகள் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

இவ்விழாவில், ஊர்வலங்கள், கலை நிகழ்வுகளில் கூத்து கரகம், கும்மி, கோலாட்டம், வசந்தன், காவடி, பறைமேளம் போன்ற பாரம்பரியக் கலை ஆற்றுகைகள் ஆற்றுப்படுத்தப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .