2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

அ.மு.பாறூகின் 'சந்தன மரம்' நூல் வெளியீடு

Super User   / 2013 நவம்பர் 04 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை கலாபூஷணம் அ.மு.பாறூக் எழுதிய மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு நூலான 'சந்தன மரம்' நூல் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நூல் புரவலர் புத்தகப் பூங்காவின் 33ஆவது நூல் வெளியீடாகும். இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ றஸாக் பிரதம அதிதயாக கலந்துகொண்டார்.நூலின் முதற் பிரதியை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முகர்ரப் பெற்றுக்கொண்டார்.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், ஆசிரியர் ஜெஸ்மி எம். முஸா, கவிஞர்களான மருதமுனை ஹஸன், எம்.எம்.விஜிலி, அன்புடீன், மு.சடாட்சரன், செங்கதிரோன் மற்றும் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X