2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா ஜெனிரா தௌபீக் கைறுல் அமான் ஆசிரியை எழுதிய மழலையர் மாருதம் (சிறுவர் உலவியல் கட்டுரை, முப்லிஹாவின் சிறுவர் காணங்கள் (சிறுவர் பாடல்கள்) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை கிண்ணியா பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் டொக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப்பின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.இம்ரான் மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், வரவேற்புரையை கிண்ணியா கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.சீ.முனவ்வரா நளீம், சுpறப்புரையை பானந்துறை ஒய்வுபெற்ற ஆசிரியர் எம்.பீ.எம்.றிஸ்வான் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் பெருந்திரளான கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊர் பிரமுகர்கள், பெண்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X