2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மேமன் கவியின் நூல் வெளியீடு

Super User   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேமன் கவியின் 'மொழி வேலி கடந்து' நவீன சிங்கள இலக்கியங்கள் ஒரு பார்வை எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு 12 பிரைட்டன் ரெஸ்ட்டில் நடைபெறவுள்ளது.

தேசபந்து சுமனசிரி கொடகே, நந்தா சுமனசிரி கொடகே, டொமினிக் ஜீவா ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரபல தமிழ் மற்றும் ஆங்கில பத்தியெழுத்தாளரும் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன், ருஹூனுப் பல்லைக் கழக விரிவரையாளர் தம்மிக்க ஜயசிங்க, மொழிபெயர்ப்பாளர் ஹேமச்சந்திர பதிரன ஆகியோர் நூலறிமுகம் செய்யவுள்ளனர்.

நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாஷிம் உமரும் சிறப்புப் பிரதிகளை துரைவி ராஜ். பிரகாஷ், ஆரிப் அஸீஸ், எஸ். பரமசிவம் மற்றும் முஹமட் இக்பால் ஆகியோர் பெற்றுக்கொள்வர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .