2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

கலாசார விழாவும் 'இளம் பரிதி' சிறப்பு மலர் வெளியீடும்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார பேரவை ஏற்பாடு செய்த கலாசார விழாவும் 'இளம் பரிதி' சிறப்பு மலர் வெளியீடும் இன்று கண்ணகிபுரம் லயன்ஸ் கழக மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளரும் பிரதேச செயலக கலாசரப் போரவையின் தலைவியுமான திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் எஸ்.யோகராசா 'தமிழ் துறையின் வளர்ச்சி' எனும் தலைப்பில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்டதுடன் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நாடகத்துறை கலைஞரான வீ.இரத்தினசிங்கம் மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்த எம்.கணபதிபிள்ளை ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

சிறப்பு மலரின் அறிமுகத்தினையும் விமர்சனத்தினையும் கவிஞர் முத்து மாதவன் நடத்தியதுடன் 'கலாசாரமும் பாதுகாப்பும்' எனும் தலைப்பில் நாடகமும், நாட்டுக் கூத்து, நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X