2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கலாசார விழாவும் சுயம்பு சஞ்சிகை வெளியீடும்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்குப்(பட்டிப்பளை) பிரதேச செயலக கலாசார விழாவும் சுயம்பு சஞ்சிகை வெளியீடும், எதிர்வரும் 8ஆம் திகதி காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளரும் கலாசாரப்பேரவை தலைவருமான திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் டி.டப்ளியூ.யு.வெலிகல்ல, உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மண்முனை மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோரும், மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.ஸ்ரீநாத், கோட்டைக்கல்வி அதிகாரி என்.தயாசீலன், வேள்ட்விஷன் பட்டிப்பளை அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் ஜீ.ஜே.அனுராஜா ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர்.

கலாசார விழாவினையொட்டி வெளியடப்படும் சிறப்பு மலரான சுயம்பின் இரண்டாவது இதழ் வெளியிடப்படுகிறது. இதன் நூல் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா வழங்குகிறார்.

இக் கலாசார விழாவில், சோதிடத்துக்காக கதிர்காமப்போடி தம்பிப்போடி, கூத்துக்காக கதிர்காமப்போடி சின்னத்தம்பி, நாட்டு மகப்பேற்று வைத்தியத்துக்காக திருமதி மாணிக்கம் அழகிப்போடி ஆகியோர் கௌரவிக்கப்படுகின்றனர்.

கலைநிகழ்வுகள் வரிசையில், கோலாட்டம், காவடி நடனம், கூத்து என்பனவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .