2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'முதுவர்' நூலுக்கான ஆக்கங்கள் கோரல்

Super User   / 2013 செப்டெம்பர் 26 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வெளியிடப்படவுள்ள 'முதுவர்' நூலுக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

'முதுமையை எதிர்கொள்வதற்காக வாழ்நாள் முழுவதும் தயாராகுதல்' எனும் கருப்பொருளில் வெளியிடப்படவுள்ள முதுவர் நூலுக்கான ஆக்கங்களை முதியோர் அமைப்பின் அங்கத்தவர்கள்இ பாடசாலை மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அனுப்பிவைக்கலாம்.

இந்த நூலுக்கான கவிதைகள் 30 வரிகளுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.  கட்டுரைகள் 3இ500 சொற்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆக்கங்கள் தாளில் ஒரு பக்கத்தில் மாத்திரம் எழுதப்படல் வேண்டும். ஆக்கங்களை கணணி மூலம் தட்டச்சு செய்து இறுவட்டில் பதிவு செய்து வழங்குதல் அல்லது  amathu82@gmail.comஎனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் பாடசாலை அதிபரினாலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆக்கங்கள் துறைசார் பீடாதிபதியினாலும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். முதுவர் நூலுக்கான ஆக்கங்களை 10.10.2013 திகதிக்கு முன்னர் மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம், மட்டக்களப்பு என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X