2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

பாரதியின் குயில் பாட்டு தத்துவ இரகசியங்கள் நூல் அறிமுக விழா

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் எஸ்.கருணானந்தராஜா எழுதிய பாரதியின் குயில் பாட்டு தத்துவ இரகசியங்கள் நூல் அறிமுக விழா இன்று மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளர் நவம் என்ற  எஸ்.ஆறுமுகம் கலந்துகொண்டார். இதன்போது வரவேற்புரையினை தமிழ்ச் சங்க உப தலைவர் திருமதி இந்திராணி புஸ்பராசா நிகழ்த்தியதுடன் நூல் அறிமுக உரையினை கதிரவன் சஞ்சிகை ஆசிரியர் த.இன்பராசா நிகழ்த்தினார்.

நூலின் முதற் பிரதியினை நூலாசிரியரிடமிருந்து மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் விவசாய வர்த்தக சங்கத் தலைவரும் தமிழ்ச் சங்கப் பொருளாளருமாகிய ரி.ரஞ்சிதமூர்த்தி பெற்றார்.இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர் அன்புமணி உட்பட எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X