2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'மூதூர் உமர் நெய்னார் புலவர் கவிதைகள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


'மூதூர் உமர் நெய்னார் புலவர் கவிதைகள்'  நூல் வெளியீடு சனிக்கிழமை ஜாபிறா மன்ஸில் மண்டபத்தில் இடம்பெற்றது.

மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் கலாபூஷணம் மூதூர் முகைதீன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கலாநிதி கே.எம்.இக்பால், கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.அலி, கலாபூஷணம் கலைமேகம் இப்றாஹீம், மூத்த எழுத்தாளர்களான திருமலை எஸ்.நவம், எம்.ஏ.சமது, எம்.எஸ்.அமானுல்லா, எம்.ஏ.பரீட், ஏ.எஸ்.உபைதுல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூல் முதற் பிரதியை நூலாசிரியர் எம்.எம்.ஏ.அனஸிடமிருந்து மூத்த எழுத்தாளர் எம்.ஏ.சமது பெற்றுகொண்டார். இதேவேளை, வெளியீட்டு வைபவத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நூற் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மூதூர் உமர் நெய்னார் புலவரின் கவிதைகள் நூலின் தொகுப்பாசிரியர் எம்.எம்.ஏ.அனஸ் இப்புலவரின் பேரர் என்பது குறிப்பிடத்தக்கது. 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X