2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

யாழில் 'தெய்வீக சுகானுபவம்' கலாசார நிகழ்வு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய இலங்கை அறக்கட்டளை அமையத்தின் ஆதரவுடன், யாழ். இந்திய துணைத் தூதரகமும், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் 4 முதல் 6ஆம் திகதி வரை தெய்வீக சுகானுபவம் கலாசார நிகழ்வினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கலாச்சார நிகழ்வானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தி சமகாலத்தில் நடைபெறவுள்ளது.

இக்கலாசார நிகழ்வில், கர்நாடக சங்கீத கலைஞர் ரி.எம்.கிருஸ்ணா உட்பட புகழ்பெற்ற பாடகர் சுதா ரகுநாதன், பரத நாட்டிய கலைஞர் லீலா சாம்ஸன் மற்றும் இசை, மற்றும் நடனக் கலைஞர்களும் வருகை தரவள்ளனர்.

இந்த வருகையின் போது, வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் ஏனைய குரலிசை, நடன துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கம் பயிலரங்கம் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும், இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X