2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வட மாகாண இலக்கியப் பெருவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வட மாகாண இலக்கியப் பெருவிழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1,2ஆம் திகதிகளில் முல்லைத்திவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வட மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத் திணைக்கள அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படும் இலக்கியப் பெருவிழாவானது இம்முறையும் பாரிய விழாவாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை பண்பாட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

முதல் இரண்டு நாட்களும் காலையில் இலங்கை தமிழ் இலக்கியங்களின் ஊடாக மொழித்திறனும் இலக்கியப் பயனும் என்னும் பொருளில் பன்னிரென்டு ஆய்வாளர்களின் கட்டுரைகள் ஒரு நாளைக்கு ஆறுவீதம்சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பிற்பகலில் பலவேறு கலைஞர்களினதும், பாடசாலைகள் மற்றும் கலை அமைப்புக்களினதும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .