2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஒரு கூண்டின் ஆதங்கம் எனும் கவிதை நூல் வெளியீடு

Super User   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜௌபர்கான்

காத்தான்குடி கவிஞர் எம்.எம்.ஜுனைதீன் எழுதிய ஒரு கூண்டின் ஆதங்கம் எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பாவலர் சாந்திமுகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதில் நூல் நயவுரையை கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புகாரி நிகழ்த்தினார். முதற் பிரதியை தொழிலதிபர் அல் ஹாபிழ் ஏ.ஆர்.எம்.பாஹீர், முதன்மை பிரதியை நியாஸ் ஹாலித் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .