2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

நான்கு நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் எழுத்தாளருமான சு. வரதகுமாரின் மூன்று நூல்களின் வெளியீடு வவனியா நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரதகுமாரின் 'மனவடுக்கள்' கவிதைத் தொகுப்பும் 'மனமே பேசு' குறுநாடக தொகுப்பும் 'சிந்தித்தால் துன்பமில்லை' சிறுவர் கதை நூலும் வெளியிடப்பட்டதுடன் செ சதீசின் இரும்புக் கதவுக்குள்ளிருந்து விதை தொகுப்பும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இவ் வெளியீட்டு நிகழ்வில், பிரதம விருந்தினராக சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திருமதி ந.கீதாஞ்சலியும் சிறிப்பு விருந்தினராக நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அதிபர் சு. அமிர்தலிங்கமும் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், இசை இளவரசர் கந்தப்பு ஜெயந்தன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ். ஜோர்ஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X