2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழித் தினவிழா

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழித் தினவிழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ்.இந்து மகளீர்க் கல்லூரியில் வடமாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன்போது தமிழ்மொழித்தின விழாவை முன்னிட்டு 'கவின் தமிழ்' என்ற நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மாகாண மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுனரின் செயலாளர் இ.இலங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், மாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா உட்பட பலர்  கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X