2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

முன்னாள் போராளியின் 'கம்பிகளின் மொழி' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஜூன் 10 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


முன்னாள் போராளியான பிரேம்குமார் எழுதிய 'கம்பிகளின் மொழி' நூல் வெளியீடு நேற்று மாலை வல்வெட்டித்துறை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்.மாவட்ட புனர்வாழ்வு வேலைத்திட்ட அதிகாரி மேஜர் ஜெகத் குமார தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, உரையாற்றிய அவர்,

'சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளிடம் பல்வேறு திறமைகள் இருப்பதை  அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

தங்களது வாழக்கையில் பல்வேறு கசப்பான அனுபவங்களை பெற்ற இவர்கள் வாழ்வில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும். வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும்.

அத்துடன், முன்னாள் போராளிகளான இவர்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது எம்முடன் தொடர்பு கொண்டால் நாம் உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளோம்' என்று அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X