2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'டெங்கை ஒழிப்போம்' விழிப்புணர்வு கூத்து

Kogilavani   / 2013 ஜூன் 02 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் மேடையேற்றியிருந்த 'டெங்கை ஒழிப்போம்' என்ற கூத்து முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது.

மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது.

வடமோடி நாட்டுக் கூத்தின் தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டு இக்கூத்து தயாரிக்கப்பட்டது.

இந்த விசேட கூத்தானது 25 நிமிட நேரத்தைக் கொண்டது. குறைந்த நேரத்திற்குள் பல விடயங்களை உள்ளடக்கி இருப்பதுடன் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டமையினால் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

மேற்படி மாகாண மட்டப் போட்டியின்போது மட்டக்களப்பு மாவட்டமும், அம்பாறை மாவட்டமும், திருகோணமலை மாவட்டமும் பங்கு பற்றின.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. 

இப்பாடசாலை கோட்ட மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் ஆகிய மட்டங்களில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகி அதிலும் முதலாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .