2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'காலத்துயரும் காலத்தின் பதிவும்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 மே 28 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார்


திருகோணமலையில் கட்டுரையாளர் யதீந்திரா எழுதிய 'காலத்துயரும் காலத்தின் பதிவும்' என்னும் நூல் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தனிடமிருந்து  முதல் பிரதியை திருகோணமலை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்;குரிய கலாநிதி யோசெப் கிங்ஸ்லி சுவாம்பிள்;ளை பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதியை நகரசபைத் தலைவர் க.செல்வராசா, சட்டத்தரணி ஆ.ஜெகசோதி ஆகியோர் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X