2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

சங்காய் - சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் தமிழர் படைப்புகள்

A.P.Mathan   / 2013 மே 26 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


சங்காய்- சர்வதேச திரைப்பட விழா-2013இல் இம்முறை புலம்பெயர் தமிழர்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படமும் முதல் 12 இடங்களுக்குள் தெரிவாகியிருக்கின்றது.
 
16ஆவது சங்காய்- சர்வதேச திரைப்பட விழா 2013இற்காக இம்முறை 122 நாடுகளிலிருந்து 1600இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் போட்டிக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதிலிருந்து மிகவும் தரம்வாய்ந்த நடுவர் குழுவினரால் 12 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 12 திரைப்படங்களுள் புலம்பெயர் தமிழர்களினால் உருவாக்கப்பட்ட A Gun & A Ring (ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்) என்ற திரைப்படமும் உள்வாங்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.
 
கனடாவின் ஐ கச் மல்டிமீடியா நிறுவனத்தில் தலைவர் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் கனடா வாழ் ஈழத்தமிழ் கலைஞர் லெனின் எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படத்துடன் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவுசெய்திருந்த journalistes-vos-papiers ஆவணப்படமும் இப்போட்டியில் கலந்து கொள்கின்றன.
 
சங்காய்- சர்வதேச திரைப்பட விழா 2013
சங்காய் சர்வதேச திரைப்பட விழா இவ்வருடம் 16ஆவது விழாவாக நடைபெறுகின்றது. இந்நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதிவரை சங்காயில் நடைபெறவுள்ளது. சங்காய் சர்வதேச திரைப்பட விழா சர்வதேசத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சம்மேளத்தின் அங்கீரத்துடன் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவாகும். 
 
உலகளவில் 15 சர்வதேச திரைப்பட விழாக்கள் (போட்டிகள்) முதன்மை வகிக்கின்றன. இதில் சங்காய் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. சங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் தலையாய விருதான தங்கக் குவளை (கோல்டன் கோப்ளட்) விருதுக்கான போட்டி முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இம்முறை உலகளவில் தெரிவான 12 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. இதில் இரண்டு திரைப்படங்கள் கனடியத் திரைப்படங்களாகும்.
 
முதன்மை விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட 12 திரைப்படங்களின் விபரம் வருமாறு...
A GUN & A RING                         directed by Lenin M. Sivam (Canada)
I AM YOU                                     directed by Petar Popzlatev (Bulgaria)
JOY                                               directed by Elias Giannakakis (Greece)
MAINA                                          directed by Michel Paulette (Canada)
THE MAJOR                                directed by Yury Bykov (Russia)
RELIANCE                                   directed by William Olsson (Sweden)
MR. MORGAN’S LAST LOVE   directed by Sandra Nettelbeck (German / Belgium)
TASTE OF POETRY                   directed by Savaş Baykal (Turkey)
UNBEATABLE                            directed by Dante Lam (China)
UNDER THE NAGASAKI SKY   directed by Taro Hyugaji (Japan)
FISTS OF LEGEND                     directed by Woo-Suk Kang (Korea)
Amazing                                     directed by Hu Xuehua (China)
 
ஆண்டு தோறும் உலகரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அல்லது பிரதேசங்களில் இருந்து 2000இற்கும் மேற்பட்ட திரைப்படங்களாவது இப்போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. தங்கக் குவளை (கோல்டன் கோப்ளட்) விருதுப்போட்டி இதுவரை சர்வதேச அளவில் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத இளமையும் திறமையும் கொண்டவர்களின் படைப்புக்களிலிருந்து பல்வேறு திரைப்படங்களை வழங்குகின்றது. மாறுபட்ட களங்கள் மற்றும் பாணிகள் மூலம் வெவ்வேறு வாழ்வியல் மற்றும் கலாசாரங்களை வெளிப்படுத்தும் படைப்புக்களை இது ஊக்குவிக்கின்றது.
 
போட்டித் திரைப்படங்கள் விழாக்குழுவினராலும் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மூலமும் பிரேரிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படுகின்றன. இவை இறுதியாக விழாவில் காட்சிப்படுத்தப்படுவதுடன் சர்வதேச ஜுரர்கள் உள்ளடக்கிய ஒரு தேர்வுக்குழு மூலம் தங்கக் குவளையைப் பெற்றுக்கொள்ளும் முதல்தரத் திரைப்படம் தேர்வு செய்யப்படுகின்றது.
 
இம்முறையும் உலகளவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என தொழில்துறைசார் திறமையாளர்களை உள்ளடக்கிய ஏழு அங்கத்தவர்களைக் கொண்டு இந்த ஜுரிகள் குழு உருவாக்கப்பட்டிருக்கின்றது.
 
உலகளவிலுள்ள பொது ஊடகங்களும், பிரபலங்களும் மற்றும் பொதுமக்களும் இந்தவிழாவை உயர்தரமான விழாவாகக் கருதுகின்றனர்.
 
இவ்விழாவில் வழங்கப்படும் விருதுகள்
சிறந்த திரைப்படம் தங்கக் குவளை விருது (முதலாவது திரைப்படம்)
நடுவர் தெரிவில் மகத்தான விருது (இரண்டாவது திரைப்படம்)
சிறந்த இயக்குநர்
சிறந்த திரைக்கதை
சிறந்த நடிகர்
சிறந்த நடிகை 
சிறந்த ஒளிப்பதிவு
அத்துடன் கலை இயக்கத்துக்கான பிரிவுகள் ஆடை மற்றும் அலங்காரம் சிறந்த படத்தொகுப்பு மிகச்சிறந்த கலைச் சாதனையாளர் விருதுகளும் இவ்விழாவின் விருதுகளாகின்றன. 
 
இவ்விழாவில் ஆசியக் கண்டத்தின் சிறந்த இளம் இயக்குநர் என்ற வகையிலும் பரிசு வழங்கப்படுகின்றது. இப்பரிசுக்கான திரைப்படங்கள் தனித்த தொகுதியாகத் தெரிவுசெய்யப்பட்டு போட்டியில் இணைக்கப்படுகின்றன.
 
விழாவின் பிரதான பரிசு கோல்டன் குவளை. இது பாரம்பரிய ஓரியண்ட் கலாசாரத்தின் அடையாளமாக, பழங்காலப் பாணியிலான அழகாக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான பண்டைய சீன மதுக்குவளை விளங்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0

  • Arun Sivakumaran Friday, 31 May 2013 02:44 AM

    கனடா வாழ் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் உங்களது திரைப்பட முயற்சிக்கும், அது உலக அளவில் அங்கீகாரம் பெறும் பொருட்டான உங்கள் படைப்புக்கும் உளம் கனிந்த நல் வாழ்த்து.

    -அருண்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X