2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'முரண்பாடுகளை கையாளுதல்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 மே 26 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை முஹம்மது றிழா எழுதிய மாற்றுவெளி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவரவுள்ள 'முரண்பாடுகளை கையாளுதல்' என்னும் நூல் வெளியீட்டு விழா நேற்று சனி;க்கிழமை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கவிஞரும் ஓவியருமான எஸ்.நளீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ உரையினை மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா நிகழ்த்தினார். உரைகள் என்னும் தலைப்பில் நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், மீள்பார்வை ஆசிரியர் சிராஜ் மஷ்ஹூர், பொறியியலாளர் எம்.எம்.பளுல்ஹக், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி ஆகியோர் வழங்கினர். நூல் மதிப்பீட்டு உரையை எழுத்தாளர் ஏ.ஆர்.பர்சான் நிகழ்த்தினார்.  ஏற்புரையை நூலாசிரியர் முஹம்மது றிழாவும் நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X