2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கண்ணகி சடங்கை அலங்கரிக்கும் பாரம்பரிய கூத்துகள்

Kogilavani   / 2013 மே 23 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிக்குமார்

மட்டக்களப்பு, கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய 9 நாள் சடங்கு உற்சவத்தையொட்டி இரவு வேளைகளில் கலை நிகழ்வாக பாரம்பரிய கூத்துக்கலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமான இவ் உற்சவத்தில் 20 ஆம் திகதி இரவு வவுணதீவுக் கலைஞர்களின் 14 ஆம் போர் வடமோடிக் கூத்து இடம்பெற்றதுடன் 21 ஆம் திகதி இரவு மண்டபத்தடிக் கலைஞர்களின் தர்மபுத்திரன் வடமோடிக் கூத்து இடம்பெற்றது.

நேற்று புதன்கிழமை இரவு பருத்திச்சேனைக் கலைஞர்களின் 'பாசுபதம்' தென் மோடிக் கூத்து இடம்பெற்றது.

இதேவேளை இன்று வியாழக்கிழமை இரவு கன்னன்குடாக் கலைஞர்களின் 'அல்லி நாடகம்' தென்மோடிக் கூத்தும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கன்னன்குடாக் கலைஞர்களின் 'சுபத்திரை கல்யாணம்' வடமோடிக் கூத்தும் இடம்பெறவுள்ளது.

புராண இதிகாசக் கதைகளைக் கொண்ட இக் கூத்துக்காளனது இரவு 8 மணிமுதல் மறுநாள் காலை 5 மணி வரை இடம்பெறும் நிலையில் இக் கூத்துக்களைப் பார்ப்பதற்கு மக்கள் இரவிரவாக விழித்திருப்பது அப்பகுதி மக்கள் பாரம்பரிய கலையினை வளப்பதற்கு கொடுக்கம் ஊக்கமாக அமைந்துள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X