2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

தமிழியல் விருதுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

Kogilavani   / 2013 மே 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் வழங்கப்படும் தமிழியல் விருதுக்கான விண்ணப்ப திகதி எதிர்வரும் 2013.05.31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக எழுத்தார் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் ஓ.கே.குணநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விருதுக்கான முடிவுத் திகதியாக 2013.5.15 அறிவிக்கப்பட்டிருந்து. அது தற்போது 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எழுத்தார் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் படைப்பாளிக்ளை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழியில் விருது வழங்கி வருகின்றது.

அதுபோல் இவ்வருடமும் ஐந்தாவது தடவையாக இவ்விருதினை வழங்குவதற்கு  எழுத்தாளர் ஊக்விப்புமையம் செயல் வடிவம் கொண்டுள்ளது.

அந்த வகையில் உயர் தமிழியல் விருது: - இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர், ஒ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X