இவ்வருட இறுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புகளின் ஒன்றியம் நடத்தவுள்ள உலக இஸ்லாமிய மாநாடு பற்றிய வழிநடத்தற் குழுவை நியமிப்பது தொடர்பான ஒன்றுகூடல் நேற்று திங்கட்கிழமை காலை 10.30இற்கு ஒன்றியத்தின் தலைவரும் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு -2, தாருஸ்ஸலாம் அதிதி மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள மாநாட்டுக் குழுவிலிருந்து எழுவரை வழிநடத்தற் குழுவாக அமைச்சர் தெரிவு செய்துள்ளார். மாநாட்டுப் பிரதான குழுவில் அங்கம் வகிக்கும் இவர்கள் அக்குழுவின் ஆதரவுடனும் உறுதுணையுடனும் மாநாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளனர்.
ஆலோசகர்: அல்ஹாஜ் எம்.ரி. ஹஸன் அலி (பா.உ)
தலைவர்: டாக்டர். ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
பொதுச் செயலாளர்: அஷ்ரஃப் சிஹாப்தீன்
தேசிய ஒருங்கிணைப்பாளர்: டாக்டர் தாஸிம் அகமது
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்
குழுக்களின் இணைப்பாளர்: ரவூப் ஹஸீர்
ஊடக இணைப்பாளர்: எம்.ஏ.எம். நிலாம்
மாநாட்டுப் பிரதான குழு மற்றும் உப குழுக்கள் பற்றிய விபரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படவுள்ளன என ஏற்பாட்டுக்குழு மேலும் அறிவித்துள்ளது.