2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'சிறுகடன்' நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் எழுதிய சிறுகடன் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகதார அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பாலர் கல்வி பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பொன் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் கிழக்கு பல்லைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், முன்னாள் அரசாங்க அதிபர் புண்ணியமூர்த்தி உட்பட திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சபை உறப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதனின் மூத்தவாப்பாவின் நினைவாக கிரான் குளம் மகா வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவிக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X