2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'இந்து மதம் – பௌத்தம் - இஸ்லாம் ஓர் ஒப்பீட்டாய்வு' நூல் வெளியீட்டு

Super User   / 2013 மார்ச் 18 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


பன்னூலாசிரியர்  சீ.எம்.ஏ. அமீனின்  'இந்து மதம் – பௌத்தம் - இஸ்லாம் ஓர் ஒப்பீட்டாய்வு'  எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு  விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

திஹாரிய 'லப்சன்' வரவேற்பு மண்டபத்தில் ஏ.ஆர்.ரிஸ்வி மொஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேராததெனிய மற்றும் கொழும்பு திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராக பணியாற்றிய கலாநிதி சரத் பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சமயங்களுக்கிடையிலான ஒப்பீட்டாய்வு நூலொன்று தமிழ் மொழியில்  வெளிவருவது இதுவே முதல் தடவையாகும்.

இந்த நூலின் விமர்சன உரையை பேருவளைஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) மேற்கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நூல் வெளியீட்டு விழாவினை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி - திஹாரிய கிளை மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்க திஹாரிய கிளை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X