2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

காதல்...

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதயம் இதயம்
புலம்பெயர்கிறதே
காதல் போர் மூள்கிறதே
சுவீகரித்துச்சென்றாயே ...........!!!!

நீ ஔடதம் கொண்டு சிறைபிடிக்க
கணைகளை கொண்டு வீசுகிறாய்
சன்னம் கொண்டு இதயம் கிழிக்க
காதல் வார்த்தை பேசுகிறாய்

கம்பன் கைத்தடி கவிதை பேசும்
உன் உறையுள் வாள்காதல் பேசும்
இரத்த கறைகளில் பெயரை எழுத
முன்னர் மூன்று வார்த்தை சொல் சொல்

பனிப்போர் மூழ்கின்ற சமயம் பார்த்து
பணியாய் என்னுள் உறைந்து விட்டாய்
சாமம் விடியுமுன்னே
தக்க சமயம் சமைந்து கொள்வோம்

விசை கொடுக்கின்ற அம்புகள்முன்னே
விளயுள் விசையாக வந்துவிட்டாய்
என் தீட்டிய ஈட்டி முன்
காமதேவன் அமர்கிறான்

பாஹிம் முஹம்மட்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X