2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கிராமத்து காதல்

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடயாறு குளமொன்னு ஓடஞ்சி போச்சு
ஊரெல்லாம் தண்ணியால நலஞ்சி போச்சு
குள தெப்பம் ஒன்னு கரையில கவிஞ்சு போச்சு
ஏன் உள்ள காதலு ஒஞ்சீ போச்சு

கெளுத்தி மீனொன்னு உசிருதப்ப
தென்னங்கட்டயில வழுக்கி ஏறுதடி
கூட கட்ட ஏறிட பொட்ட ஒண்ணு
துள்ளி பாயிது பார்
 
எந்திர கிணற்றில  தண்ணிய அள்ளுற 
ஓன் மந்திர கண்ணால என்ன அள்ளுற
இடுப்பில் நீ நீர் முட்டி கனக்கையில
என் மூச்சு முட்டுதடி சத்தியமா

இதயத்துக்கு சிறகு தைச்சு
வயக்காட்டிலிருந்து தூது சொல்றன் 
சேதி வந்து சேர்ந்த உடனே
உன் கட்டு சோற கொண்டு வரணும்

தீஞ்சோறு நா விரும்ப
மீன் கொழம்பு அதை  தழுவ
பானைய வளிச்சி உண்பன்
பாசக்காரி  வெற்றில மடிச்சுந்தர்ர

சொல்லும் தெரியல சொல்லப்புரியல
அல்லும் பகலுமா அலயிறேன் போ
இருட்டுக்காடாயிடிச்சு உள்ள
கட்டுப்பாய கொண்டு போ

பாஹிம் முஹம்மட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X