2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

'இன்பமான நிகழ்வு' எனும் தலைப்பில் மாணவர்களின் கலை நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 06 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, இலங்கை உயர் தேசிய கற்கைகள் நிறுவகத்தின் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களின்  இன்பமான நிகழ்வு எனும் கலை நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிறுவகத்தின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியனும், கௌரவ அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு, மற்றும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களின் கல்வி பணிப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களின் நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மட்டக்களப்பு உயர்தேசிய கற்கைகள் நிறுவகத்திற்கு உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா கற்கைக்கு என சுமார் 600 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாகவும், அதில் 110 மாணவர்கள் புதிய வருடத்துக்கென இணைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • a.sathananthan Friday, 08 March 2013 01:21 PM

    மிகவும் நல்ல நிகழ்ச்சி. மாணவர்களுக்கு நன்மை பயப்பதாய் இருந்தால் மிக நல்லது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X