2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'ரிசானா நபீக் தேசத்தின் புதல்வி': நூல், இறுவட்டு வெளியீடு

Menaka Mookandi   / 2013 மார்ச் 02 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


'ரிசானா நபீக் தேசத்தின் புதல்வி' எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவட்டு என்பன காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளிடப்பட்ட இந்த நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு வைபவம் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பெண்களுக்கும் இரவு 8 மணிக்கு ஆண்களுக்குமாக இந்த வைபவம் தனித்தனியே நடைபெற்றது.

காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், ஏறாவூர் நகரசபை பிரதி தலைவர் எம்.தஸ்லீம், உட்பட அரசியல் பிரமுகர்கள், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், உலமாக்கள், முக்கியஸ்த்தர்கள், மற்றும் ரிசானா நபீக்கின் தாய் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இதன் வெளியீட்டு விழாவில் புத்தளம் இஸ்லாஹிய்யா அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர் மௌலவி எச்.எம்.மின்ஹாஜ் இஸ்லாஹியின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது. நூலின் முதற்பிரதி பெண்கள் வைபவத்தில் றிஸானாவின் தாயார் றிஸினாவிடமும், ஆண்கள் வைபவத்தில் முதற்பிரதியினை றிஸானாவின் தந்தை நபீக்கிடமும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி சவூதி அரேபியாவில் கொலை குற்றச்சாட்டு ஒன்றில் மரண தண்டனைக்குள்ளான மூதூர், ஷாபி நகரைச்சேர்ந்த ரிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது முதல் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்த கட்டுரைகள் ஆக்கங்களை தொகுத்து இந்த நூல் வெளியிடப்பட்டது. அத்தோடு ரிசானா தொடர்பான ஒரு இறுவட்டும் வெளியிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .