2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் 'கேள்வியால் ஒரு வேள்வி' நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

வவுனியா தமிழ்ச்சங்கம் நடத்தும் 'கேள்வியால் ஒரு வேள்வி' என்னும் அறிவோர் நிகழ்ச்சி எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9.30 மணி முதல் வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மங்கல விளக்கினை தொழிலதிபர் வேலாயுதன் சுரேந்திரன், திருமதி சுரேந்திரன் வசந்தமலர் தம்பதியர் ஏற்;றிவைப்பர். தமிழ்வாழ்த்தினை வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய இசை ஆசிரியை திருமதி விமலநாத சர்மா உமாமகேஸ்வரி பாடுவார்.

தொடக்கவுரையை வவுனியா மாவட்ட செயலக, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன் சறோஜினிதேவி நிகழ்த்துவார்.

தலைமையுரையை தொடர்ந்து இடம்பெறும் கௌரவிப்பு நிகழ்வில், தமது துறைகளோடு சமூகப் பணிகளாற்றி தேசிய விருதுகள் பெற்ற பெரியோர்களான, தேசமான்ய. அரிமா கந்தசாமி சிவபாலன், தேசபந்து மயில்வாகனம் சிவபாதசுந்தரம் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

அடுத்து, வவுனியா மாவட்டத்தில், யதார்த்தத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி, அவ்வத்துறை சார்ந்த வல்லுநர்கள் ஒன்பது பேர்களிடம் விடுக்கப்படும் வினாக்களும் வழங்கப்படும் பதில்களுமான 'கேள்வியால் ஒரு வேள்வி' நிகழ்ச்சியில், இலக்கியம் சார்பாக வவுனியா தெற்கு கல்வி வலய தமிழ்த்துறை உதவிக் கல்விப்பணிப்பாளர் கி.உதயகுமாரும் மருத்துவம் சார்பாக வவுனியா பொது வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி புவனேந்திரநாதன் ஆதவனும் நகரக்கட்டுமானம் சார்பாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் ந.ஸ்ரீஸ்கந்தராசாவும் சட்டம் தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கந்தசாமி தயாபரனும் சமூகநலம் தொடர்பாக வவுனியா மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் செ.ஸ்ரீPநிவாசனும் இசை தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் ந.பரந்தாமனும், சமயங்கள் தொடர்பாக வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியச் செயலாளர் சிவஸ்ரீ நா.பிரபாகரக்குருக்களும் வவுனியா அமைதியக மறை உரைஞர் முதல்வர் அருட்பணி ஸ்ரனி அன்ரனி அடிகளாரும் வவுனியா பட்டாணிச்சூர் ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் மௌலவி ஜனாப் செ.அப்துல்சமட் ஆகியோரும்  வினாக்களுக்குப் பதில் வழங்கவுள்ளார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .