2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'ஆத்மாவின் புண்' கவிதை நூல் வெளியீட்டு விழா

Super User   / 2013 ஜனவரி 06 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


கவிஞரும் எழுத்தாளருமான வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம். ஹனிபாவின்  ''ஆத்மாவின் புண்'' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி  ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட அறிவிப்பாளரான அதிபர் ஏ.ஆர்.எம் ஜிப்ரி தலைமையில் நடைபெறும் இந்த வெளியீட்டு விழாவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளhர்.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அமீர் இஸ்மாயில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான     ஏ.எம்.நௌசாத், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாக இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நவமணி பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் மற்றும்  பன்னூலாசிரியரான மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நூல் ஆய்வினை  சட்டத்தரணி மர்சும் மௌலானா மேற்கொள்ளவுள்ளதுடன் நூலின் முதற் பிரதியை தொழிலதிபர் அப்துல் கையூம் பெறவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .