2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'செல்லமே' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


குழந்தைக் கவி கிண்ணியா எம்.ரீ.சஜாத்தின் 'செல்லமே' சிறுவர் பாடல் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கலாபூஷணம் கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிறிமா ஆலை தொழில்நுட்ப பிரதம பொறியியலாளர் ஹரி சொயிட்ஜக்ஜோ, பிறிமா ஆலை உதவி முகாமையாளர் லால் முன்ஹமகே,  சிறப்பு அதிதிகளாக முன்னல் கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் ஏச்.எம்.எம்.பாயிஸ், கிண்ணியா நகரசபைத் தவிசாளர் ஹில்மி மஹ்றூப், நகரசபை உபதவிசாளர் சட்டத்தரணி எம்.சி.சபறுள்ளா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நூலின் முதற்பிரதியை றொஸானா நகை மாளிகை உரிமையாளர் எம்.எம்.முஸ்லிமீன் பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதியை சமாதான நீதிவான் எஸ்.எச்.எம்.சாஹீர்  பெற்றுக்கொண்டார்.

இந்நூலுக்கான வரவேற்புரையை மீள்பார்வை உதவி ஆசிரியர் நாஸீக் மஜீதும் நூல் ஆய்வுரையை கவிஞரும் சட்டத்தரணியுமான எம்.சி.சபறுள்ளாவும் வாழ்த்துப்பாவை காவியஸ்ரீ கவிமணி அ.கௌரிதாசனும் நூல் நயவுரையை கலாபூஷணம் கலாநிதி கே.எம்.எம்.இக்பாலும் ஆற்றினர்.

இதன்போது சிறுவர்களின் நடன நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .