2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

2013 அரச இசை விருது வழங்கலுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Kogilavani   / 2013 மார்ச் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகத்தின் அரச இசைக் குழு ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்கின்ற 2013 அரச இசை விருது விழாவுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.

2011 முதல் 2012 வருடம் வரை வெளிவந்த சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான படைப்புகள் இதற்காக எதிர்பார்க்கப்படுகின்றன.

இதற்கமைவாக, ஆண், பெண்களுக்கான சிறந்த தனி பாடல், சிறந்த பாடலாக்கல் மற்றும் இசையமைப்பு, பாடல் வரிகள் ஆக்கம், சிறந்த திரை ஒளி ஆக்கம் (இயக்கம்),  சிறந்த இறுவட்டு  (தயாரிப்பு),  (குறைந்தபட்சம் 10 பாடல்களாக இருத்தல் வேண்டும்),  சிறுவர் சிறுமியருக்கான சிறந்த தனிப்பாடல் (வயதெல்லை 8-15 இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்), பிரபல சிறுவர் பாடல் வரிகள் ஆக்கம் (திறந்த மட்டம்),

சிறுவர் பாடலாக்கல் மற்றும் இசையமைப்பு (திறந்த மட்டம்), சிறுவர் திரை ஒளி ஆக்கம் (திறந்த மட்டம்) – இயக்கம், இறுவட்டு  (தயாரிப்பு), கிராமிய பாடல் (ஆண்) தனி, கிராமிய பாடல் (பெண்) தனி, கிராமிய பாடல் நவீன வடிவம், (இதற்காக இசை மற்றும் இசை உபகரணங்கள் பாவித்தல்), சிறந்த வானொலி இசை நிகழ்சி, சிறந்த குழு பாடல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2013 அரச இசை விருது வழங்கலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது விண்ணப்பப்படிவங்களை இறுவட்டுடன் 2013 மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவுத் தபாலினூடாக அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள 011 2872036,   011 2872031   ஆகிய இலக்கங்களினூடாக பெற்றுகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .