2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

இலங்கை தமிழ் இசைக் கலைஞர்கள் சங்கம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தமிழ் இசைக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சங்கம் ஒன்றினை உருவாக்கும் எண்ணம் பலகாலமாக பலரின் கருத்தில் இருந்துவந்த போதும் அதற்கு செயல்வடிவம் கொடுக்குமுகமான ஒரு கூட்டம் அண்மையில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

முகப்புத்தகம் வாயிலாகவும் வாய்மொழியாகவும் அறிவித்தல் விடப்பட்டு 24 இசைக் கலைஞர்களின் பங்களிப்போடு இக்கூட்டம் நடைபெற்றது. சங்கம் ஒன்றை நிறுவுவதற்கான அவசியம்பற்றிக் கலந்தலோசிக்கபட்டு அனைவராலும் ஆமோதிக்கப்பட்டு சட்டரீதியாக இச்சங்கத்தினை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் இக்கூட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சங்கமொன்றை நிறுவவேண்டியுள்ளமைக்கான காரணிகளாவன..

01) கலைஞர்களுக்கிடையிலான தொடர்பாடலை இலகுபடுத்தல்.
02) இடைவெளிகளைக் களைந்து அறிமுகங்களை ஏற்படுத்தி இசை நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
03) இசைகலைஞர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு ஒருமனப்பட்ட தீர்வுகளை காண முயலுதல்
04) கலாசார அமைச்சுடன் சிறந்த உறவைப் பேணி, அமைச்சின் தகவல்களை அனைவரும் அறியச் செய்தல் மற்றும் அரசாங்கத்துடனான கலைஞர்களின் உறவை பேணுதல். சகோதர மொழிக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தால் மற்றும் அமைச்சால் வழங்கப்படும் சலுகைகளை தமிழ்க் கலைஞர்களும் பெற்றுக்கொள்ள வழிவகைகள் செய்தல்.
05) அனுபவ மற்றும் திறமைப் பகிர்வின் மூலம் தமிழ் இசை படைப்புகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளை மேலும் தரமானதாக மாற்றுதல்

இவற்றின் அடிப்படையில் எதிரவரும் ஜனவரி மாதம் இச்சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட ஆயத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இக்கூட்டம் பற்றிய விபரம் கிடைக்கப் பெறாத ஏனைய கலைஞர்களையும் பல்வேறு வழிகளில் அறிவுறுத்தி அடுத்த ஒன்று கூடலுக்கு சமூகமளிக்க செய்வதோடு சங்கத்தின் சட்டதிட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் சம்பந்தமான இறுதி முடிவுகள் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .