2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வவுனியா மாவட்ட கலை இலக்கிய விழா

Super User   / 2012 டிசெம்பர் 04 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த வவுனியா மாவட்ட கலை இலக்கிய விழா இன்று செவ்வாய்க்கழமை இடம்பெற்றது.

காலை 8.30 மணி முதல் இரு அமர்வுகளாக வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடாத்தியது. காலை அமர்வு கவிஞர் கயல்வண்ணன் அரங்கில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம் விருந்தினராக வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் உபபீடாதிபதி சிதம்பரநாதன் கலந்துகொண்டார்.

மாலை 1.30 மணிக்கு ஆரம்பமாகிய அமர்வானது சித்தாந்த வித்தகர் கவிஞர் கதிர் சரவணபவன் அரங்கில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பல்துறை சார்ந்த இளம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .