2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 நவம்பர் 28 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி, எம்.பரீட்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிண்ணியா நகரசபை கிண்ணியா வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நகரபிதா சட்டத்தரணி எம்.எம்.ஹில்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.குணாநாதன், கிண்ணியா வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.சி.முனவ்வரா நளீம், கிண்ணியா பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முசில், கிண்ணியா நகர சபை உதவி தவிசாளர் சட்டத்தரணி எம்.சி.சபருள்ளா, கிண்ணியா தளவைத்தியசாலை வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம், கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் ஏ.ஜே.எம்.றூமி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அறிவுக் களஞ்சியம், கிராமிய நடனம், கட்டுரை மற்றும் கவிதை ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்; கிண்ணியா கவிஞர்களின் கவியரங்கு, பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .